×

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து பள்ளியில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு ஏற்ப விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

The post விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem District Nature and Environment Protection Organization ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...